வீடே கம கம வாசணையுடன் நெத்தலி கருவாடு தொக்கு செய்ய தெரியுமா? இந்த பொருள் சேர்த்தால் மட்டும் போதுமாம்..
பொதுவாக நெத்திலி மற்றும் கருவாடை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.
சமைக்கும் போது இதிலிருந்து வரும் வாசனை வீட்டிலுள்ளவர்கள் எந்த பக்கத்தில் இருந்தாலும் பசியை தூண்டும்.
அந்தவகையில் சப்பாத்தி, தோசைக்கு தொட்டு கொள்வதற்கு சூப்பரான கம்பினேஷன் தான் இந்த நெத்தில், கருவாட்டை பயன்படுத்தி செய்யப்படும் குழம்பு, தொக்கு.
அந்தவகையில் காலையில் பிரேக்வாஸ்ட்க்கு நெத்தலியையும் கருவாட்டையும் பயன்படுத்தி செய்யப்படும் நெத்தலி கருவாடு தொக்கு எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- நெத்திலி கருவாடு - 100 கிராம்
- தக்காளி - 4
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- பூண்டு - 10 பல்
- பச்சை மிளகாய் - 2
- தட்டிய இஞ்சி பூண்டு - 2 மேசைக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி
- கறிவேப்பில்லை - சிறிதளவு
- கடுகு - அரை மேசைக்கரண்டி
- நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
எப்படி செய்றாங்க தெரியுமா?
முதலில் தொக்கிற்கு தேவையான நெத்தலி கருவாட்டை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். இதன் பின்னர் தொக்கிற்காக எடுத்து வைத்த தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு என்பவற்றை எடுத்து சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதங்க விட வேண்டும்.
வெங்காயம் நன்றாக வெந்து இருக்க வேண்டும், மேலும் இஞ்சி பேஸ்ட்டில் பச்சை வாசனை போகும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.
வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அதனுடன், கருவாடை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தழை போட்டு இறக்கினால் சுவையான நெத்தலி கருவாட்டு தொக்கு தயார்!