நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு என்ன? கருப்பு படத்திற்கு வாங்கிய சம்பளம்
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் சொத்து மதிப்பு மற்றும் வாங்கும் சம்பளம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர்.
பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், பின்பு பல படங்களில் தொடர்ந்து நடித்தனர்.

பின்பு 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகளுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். தற்போது ஜோதிகா குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகின்றார்.
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கருப்பு படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றதுடன், வசூலையும் குவித்துக் கொண்டிருக்கின்றது.
சொத்து மதிப்பு என்ன?
ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய கருப்பு படத்திற்கு சூர்யா 45 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். இப்படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.147 கோடி வசூலை பெற்றுள்ளதாம்.
சிங்கம் படத்திற்கு பின்பு சூர்யாவிற்கு நல்ல வரவேற்பினை இப்படம் கொடுத்துள்ளது. சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ.350 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.

சென்னை மற்றும் மும்பையில் விலையுயர்ந்த சொகுசு வீடு மற்றும் கார்களையும் வைத்துள்ளாராம். இவரது மனைவி ஜோதிகாவின் சொத்துக்களை சேர்த்து சூர்யாவிற்கு ரூ.500 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் இவர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகின்றனர். இதில் ஜெய் பீம், சூரரைப் போன்று போன்ற படங்கள் தயாரிக்கப்பட்டு நல்ல வசூலையும், வரவேற்பினையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |