செஸ் ஒலிம்பியாட் : ஒரு செஸ் போர்டின் விலை இவ்வளவா! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
செஸ் ஒலிம்பியாட் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழ்நாடு அரசால் வெற்றிகரமாக இதைச் செயல்படுத்த முடியுமா? விமர்சனங்களைக் கடந்து, நேற்று பிரம்மாண்டமாக 44வது ஒலிம்பியாட் போட்டி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.
வெளிநாட்டு வீரர்கள் முதல் உள்ளூர் போட்டியாளர்கள் வரை அத்தனைப் பேரும் தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகளை பாராட்டியுள்ளனர்.
பிரம்மாண்டமாக நடைப்பெற்று நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சிக்கு பின், பல சுவாரசியமான சம்பவங்கள் வைரலாகி வந்தன.\

செஸ் போர்டின் விலை
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டில் பயன்படுத்தப்படும் செஸ் போர்ட் ஒன்றின் விலை இந்திய மதிப்பு படி 30,000 இருக்கும் என கூறப்படுகிறது.
இதுபோன்று 740 செஸ் போர்டுகள் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த செஸ் போர்ட், இதில் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்தையும் பதிவு செய்துவிடுமாம்.
இதனால் ஒரு வீரர் ஆடிய ஆட்டத்தை மறு ஆய்வு செய்ய உதவிகரமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.
Manufactured in the Netherlands, this electronic chess board and pieces cost Rs 30,000. There are 740 sets for use at the #ChessOlympiad2022 @chennaichess22 pic.twitter.com/fUyzTzfalo
— Santhosh Kumar (@giffy6ty) July 29, 2022