மரணத்தின் கடைசி நொடியை நேரலை செய்த பயணி: நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சி
நேபாளத்தில் 72 பேர்களுடன் பயணப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்து
நேபாளத்தில் 72 பேர்களுடன் பயணப்பட்ட விமானம் நெருப்பு கோளமான நிலையில், அதில் எவரும் உயிருடன் தப்பவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி ஞாயிறன்று பகல் 10.50 மணியளவில் விபத்தில் சிக்கிய இந்த விமானத்தில், 68 பயணிகள் உட்பட அனைவரும் பலியாகியுள்ளதாக சொல்லப்படுகின்றது.
குறித்த விமானத்தில் இந்தியர்கள் ஐவர், நண்பர்கள் சேர்ந்து நேபாளத்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.
அதில் நண்பர்கள் ஐவரும் அந்த பேஸ்புக் நேரலையில் விமானம் தரையிறங்கப்போகும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்துள்ளார். அதன் பின் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தடுமாறுவதும், பின்னர் இமயமலையில் போகாரா பள்ளத்தாக்கில் மோதியதாக தெரியவந்துள்ளது.
@reuters
நேரலை பதிவு
இதில் ஒருவர் விமானம் தரையிறங்கும் போது தமது பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்துள்ளார். அந்த நேரலையானது மரணத்தின் கடைசி நொடி பதிவாகியுள்ளது.
அந்த காணொளியில், வாடிக்கையாக தரையிறங்கும் விமானம், திடீரென்று நெருப்பு கோளமாவதும் அலறல் சத்தமும் பதிவாகியுள்ளது.
காணொளியை பதிவு செய்தவர்
காணொளியை பதிவு செய்தவர் 29 வயதான சோனு ஜெய்ஸ்வால் எனவும், 5 நண்பர்கள் சேர்ந்து நேபாளத்தில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சோனு ஜெய்ஸ்வால் மற்றும் நண்பர்கள் என ஐவர், நான்கு ரஷ்யர்கள், அயர்லாந்து நாட்டவர் ஒருவர், தென் கொரிய நாட்டவர் இருவர், அவுஸ்திரேலியா,பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா நாட்டவர்கள் தலா ஒருவர் என மொத்தம் 10 வெளிநாட்டவர்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
மரணமடைந்தவர்கள் முதலில் அடையாளம் காணப்பட்டவர் 33 வயதான பயண பதிவர் எலினா பாண்டுரோ என தெரியவந்துள்ளது.
@reuters
மீட்பு பணிகள்
விமான விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் தகவலுக்காக கண்ணீருடன் காத்திருக்கும் நிலையில், மீட்புப் படையினர் தீவிரமாக உடல்களைத் தேடி வருகின்றனர்.
மேலும் நேபாளத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விமான விபத்து என்றே இதனை பலரும் கூறுகின்றனர்.
@reuters