நேபாளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு! - பதறவைக்கும் வீடியோ
Nepal Helicopter Crash video viral : நேபாளத்தில் எவரெஸ்ட் மலைக்கு அருகாமையில் உள்ள சோலுகும்பு பகுதியில், அதிக உயரத்தில் அமைந்த விமான மையத்தில் தரையிறங்க முயன்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த வசந்த் குமார் பலராமராமடு என்பவர் உயிரிழந்ததாக காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.

வைரலாகும் காணொளி
தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹெலிகாப்டர்களின் சுழலிகள் ஒன்றோடொன்று மோதியதில், அவை பனிப் படர்ந்த தரையில் விழுந்து சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் மலைப்பகுதிகளில் நிலவும் கடினமான நிலப்பரப்பு, திடீர் வானிலை மாற்றங்கள் மற்றும் அதிக உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் ஹெலிகாப்டர் பயணங்கள் சவாலானவையாக உள்ளன.
குறிப்பாக, மெல்லிய காற்றினால் ஹெலிகாப்டர்களுக்குத் தேவையான மேல்நோக்கிய விசையும் இயந்திரங்களின் செயல்திறனும் குறைவதால், இத்தகைய உயரமான பகுதிகளில் விமானப் பயணங்கள் அதிக ஆபத்தைக் ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
BREAKING: Two helicopters operated by Fishtail Air and Dynasty Air collided while landing at Pheriche helipad in Solukhumbu. Authorities said the helicopters’ rotor blades struck each other during the landing process. Further details about the incident are awaited. Video ©: Webcam Nepal.
— Everest Today (@EverestToday) November 3, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |