அச்சமூட்டும் புதிய NeoCov வைரஸ்: உலக சுகாதார அமைப்பு அளித்த விளக்கம் என்ன?
சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நியோகோவ் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் மேலும் ஆய்வுகள் தேவை என்று கூறியுள்ளது.
வூஹான் ஆராய்ச்சியாளர்கள் குழு தென்னாப்பிரிக்காவில் உள்ள வெளவால்களில் நியோகோவ் என்ற புதிய வகையான கொரோனா வைரஸைக் கண்டறிந்துள்ளது.
ஒரு ஆய்வில், இந்த வைரஸ் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ்கள் என்பது ஜலதோஷம் முதல் கடுமையான சுவாச நோய்க்குறி வரையிலான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் ஒரு பெரிய குடும்பமாகும்.
மனிதர்களுக்கு ஏற்படும் 75% தொற்று நோய்களுக்கு மூல காரணம் விலங்குகள் என்று அந்த அமைப்பு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நியோகோவ் எனும் வைரஸ் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற வளர்ந்து வரும் ஜூனோடிக் வைரஸ்களை சமாளிக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக உலக அமைப்பு கூறிகின்றன. சீன ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு WHO நன்றி தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க போடப்படும் கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசிகள் எதுவுமே இந்த நியோகோவ் வைரஸிலிருந்து பாதுகாப்பு தராது. ஏனெனில், அது முற்றிலும் வேறு வடிவத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் என்று குறிப்பிடப்படுகிறது.
அதாவது மெர்ஸ்-கோவ் (MERS-CoV) வைரஸ் மற்றும் சார்ஸ் - கோவ் (SARS- CoV) வைரஸ்களின் கலவையாக இருப்பதாக கூறுகின்றனர்.
NeoCoV எனும் புதிய வைரஸின் , நெருங்கிய தொடர்பு கொண்ட பிடிஎப்-2180- கோவ் வைரஸ் மனிதர்களிடம் பரவும் தன்மை பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.