மலச்சிக்கலை ஓட விடும் நெல்லிக்காய் சட்னி.. இப்படி ஒரு தடவை செய்து பாருங்க
பொதுவாக காலையில் இட்லி, தோசை செய்தால் அதற்கு என்ன காம்பினேஷன் கொடுக்கலாம் தீவிர சிந்தனை இருக்கும்.
அப்படி குழப்பத்தில் இருப்பவர்கள் வீட்டில் மூன்று நெல்லிக்காய் இருந்தாலே போதும். ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் சட்னி செய்யலாம்.
அடிக்கடி ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் செய்து கொடுத்தாலும், வீட்டிலுள்ளவர்களுக்கு சலிப்பாகி விடும். நெல்லிக்காய் சட்னியுடன் இட்லி, தோசை சாப்பிடும் பொழுது வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகரிக்கும்.
மழை நேரத்தில் சாப்பிடும் பொழுது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், நார்ச்சத்து அதிகமாக கொண்ட நெல்லிக்காய் சட்னி எப்படி இலகுவாகவும், சுவையாகவும் தயாரிக்கலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் - 3
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- பச்சை மிளகாய் - 4
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி - 1 கையளவு
- பூண்டு - 4 பல்
- உப்பு - சுவைக்கேற்ப
- புளி - சிறிய துண்டு
- தண்ணீர் - தேவையான அளவு
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வரமிளகாய் - 1
- பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன
நெல்லிக்காய் சட்னி எப்படி செய்யலாம்?
முதலில் சட்னிக்கு தேவையான தேங்காயை துருவி தனியாக வைத்து கொள்ளவும்.

அதன் பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை போடவும். அதனுடன் சட்னிக்கு தேவையான முக்கிய பொருளாக பார்க்கப்படும் நெல்லிக்காயை துண்டுகளாக்கி போட்டு, உப்பு கொஞ்சமாக சேர்க்கவும்.
சட்னிக்காக எடுத்து வைத்திருக்கும் புளி கொஞ்சமாக போட்டு, தண்ணீர் தேவையான அளவு விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, கெட்டியாக இருக்கும் சட்னியை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.

இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான பொருட்களை போட்டு தாளித்து சட்னிக்கு மேல் ஊற்றி கலந்து விடவும்.
கடைசியாக கொஞ்சமாக பெருங்காயத் தூள் போட்டு கலந்து விட்டால் சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |