நான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டேன் - மனம் திறந்து பேசிய நடிகை நேஹா
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டேன் என்று நடிகை நேஹா மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை நேஹா
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நேஹா தூபியா. இவர் மாடலிங் துறையிலும் இருந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு நடிகர் அங்கத் பேடியை காதலித்து திருமணம் செய்தார்.
இத்தம்பதிக்கு தூபியா பேடி என்ற பெண் குழந்தை உள்ளது. இதன் பின்பு நேஹா கடந்த 2021ம் ஆண்டு 2வதாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார் என்று கிசுகிசுக்கப்பட்டார்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டேன்
இந்நிலையில், ஒரு சேனலுக்கு நேஹா மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில்,
திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமாகிவிட்டேன். இதனால் எங்கள் திருமணம் அவசர, அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. நான் கர்ப்பமாகிவிட்டேன் என்று சொன்னதும் என் பெற்றோர்கள் என்னைப் புரிந்து கொண்டார்கள்.
உடனே, 72 மணிநேரத்திற்குள் இதை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இதனையடுத்து, நானும் அங்கத் பேடியும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். நாங்கள் எடுத்த முடிவு யாரையும் காயப்படுத்தவில்லை.
அப்படி இருக்கும்போது நமக்கு பிடித்ததை செய்வதில் தவறு என்ன இருக்கிறது. பிரசவத்திற்கு பிறகு என்னுடைய உடல் எடை கூடிவிட்டது. என்னை சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்தார்கள். அப்போது சில ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் கிண்டல் செய்வது தவறு என்று எனக்காக ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்தார்கள்.