திருமணத்திற்கு முன்பே மணமகளை தூக்கிய மாப்பிள்ளை... அடுத்து நடந்த தரமான சம்பவம்!
திருமணத்திற்கு முன்பு மணமகளை மாப்பிள்ளை தூக்கி செல்லும் சிறிய வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மணமகன் தனது மணமகளை திருமணத்திற்கு முன்பே ஆசையாக சுமந்து செல்வதைக் காண முடிகின்றது.
யாரும் பார்க்கவில்லை என எண்ணி காதலின் வெளிப்பாடாக மணமகன் செய்த இந்த செயல் கேமராவில் பதிவாகியுள்ளது.
சிவப்பு வண்ண லெஹங்கா மற்றும் பல வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துப்பட்டாவில் மணமகள் மிகவும் அழகாக இருக்கிறார். அப்போது அங்கு திடீரென மணமகன் வருகிறார்.
மணமகள் அருகில் வரும் மணமகன், உன்னை தூக்கிச்செல்லவா என சைகையில் கேட்கிறார். மணமகளும் சைகையிலேயே அதற்கு பதில் அளித்து விடுகிறார்.
பிறகு என்ன? தனது அழகான மணமகளை தூக்கிக்கொண்டு மணமகன் செல்லத் தொடங்குகிறார். மணமகனின் இந்த அசத்தலான காதல் இணையவாசிகளின் இதயத்தை கொள்ளைக்கொண்டுள்ளது.