துளசி இலைகளால் இப்படி ஒரு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
துளசி என்றதுமே அதன் நறுமணம் தான் அனைவரின் நினைவிலும் வரும், இதனை பலரும் ஒரு தெய்வீக தன்மை கொண்ட தாவரமாக பார்த்தாலும் இதில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
துளசி செடி நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடியது, இதன் வாசம் காற்றை சுத்திகரிக்கக் கூடியது என்பதுடன் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வாக இருக்கின்றது.
மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், சிறுநீரக பாதிப்பை குணப்படுத்தவும், தோல் நோய்களை குணப்படுத்தவும், ஜீரண உபாதைகள் தீர்வாகவும், பூச்சிக் கடியை சரி செய்ய, சுவாச பிரச்னைகளை சீராக்க, தொற்றுகளை குணப்படுத்துவதற்கான ஆன்ட்டி பாக்டீரியாவாகவும் துளசி இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படியாக எண்ணற்ற பயன்களை் துளசி அலைகளுக்கு இருந்தாலும் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பது போல போல் துளசியை அதிகளவில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகளவில் இருக்கின்றன. இது குறித்து பெரும்பாலானோர் கவனம் செலுத்துவது கிடையாது.
துளசி இலைகளை தினசரி பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப்படி...
உண்மையில், ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப்படி துளசி இலைகளில் கருவுறாமையை தூண்டும் வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
ஆண்கள் துளசியை அதிகம் சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கை குறைய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.
பெண்கள் கர்ப்ப காலத்தில் துளசி இலையை தவிர்த்துக் கொள்வது நல்லது. சில சமயங்களில் கருக்கலைப்புக்கு வித்திட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிகமாக துளசி சாப்பிட்டால் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதன் காரணமாக கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்துமாம்.
துளசி இலைகளில் ஏராளமான மருத்துவ பண்புகள் இருந்தாலும் வேறு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் துளசி இலைகளை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
துளசி இலையில் பாதரசம் மற்றும் இரும்புச்சத்து ஆகியன அதிகம் காணப்படுகின்றது மற்றும் இதில் ஆர்சனிக் கலந்துள்ளதால் துளசி இலைகளை அதிகமாக மென்று சாப்பிட்டால் பற்கள் சேதமடைய வாய்ப்பு அதிகம்.
எனவே, மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையின்றி துளசியை அதிகமாக உட்கொள்வதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
துளசி இலைகளுக்கு இரத்தக் கட்டிகளைத் தடுக்கும் பண்புகள் அதிகம் காணப்படுகின்றது. துளசியை அதிகமாக உட்கொள்வதால் இரத்தம் மெலிதாகும் அபாயமும் அதிகரிக்கின்றது.
நீரிழிவு கட்டுக்குள் இருக்க சற்று அதிகமான பவர்கொண்ட மாத்திரைகள் எடுப்பவர்கள் துளசியை எடுத்துகொண்டால் அது ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே துளசி இலைகளை தினசரி பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வதன் மூலம் பக்க விளைவுகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |