Neeya Naana: இந்த மாதிரி கேக்குறதுக்கு மட்டும் தான் நல்லா இருக்கும்... இறுதியில் கோபிநாத் அடித்த பல்டி!
நீயா நானா நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது மனைவியை அழைக்க மறந்த கணவன் தொடர்பில் பெண்ணொருவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதன் போது, கோபிநாத் குறித்த பெண்ணை கலாய்க்கும் வகையில் பேசி கணவன் பக்கம் இருக்கும் நியாயத்தையும் அழகாக எடுத்துக்காட்டிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும்.
இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வகையயில் இந்த வாரம் ஞாபக மறதி உள்ள கணவன் VS அதிக ஞாபக சக்தியுள்ள மனைவி என்ற வித்தியாசமான தலைப்பில் விவாதம் நடைப்பெற்றுள்ளது.
இதில் கணவன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது மனைவியை கூப்பிட மறந்த சுவாரஸ்யமான விடயம் குறித்த காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |