நீயா நானா: கணவரின் அன்பை பெற சமைத்து கொடுத்தால் தான் முடியுமா? கோபியின் தெறி பதில்!
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில், வீட்டு வேலைக்கு பணியாள் வேண்டும்- பெண்கள் vs நம் வீட்டு வேலைக்கு பணியாள் வேண்டாம்- குடும்பத்தினர் எனும் தலைப்பில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும்.

இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில், வீட்டு வேலைக்கு பணியாள் வேண்டும்- பெண்கள் vs நம் வீட்டு வேலைக்கு பணியாள் வேண்டாம்- குடும்பத்தினர் எனும் தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதன் போது, பெண்ணொருவர், தன் கணவரை கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் சமைத்து கொடுத்தால் தான் முடியும் என்ற கருத்தை உடைத்தெறிய வேண்டும் என்று குறிப்பிட்டதற்கு, தொகுப்பாளர் கோபிநாத் கூறிய அசத்தல் பதில் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |