கோபிநாத் கேட்ட ஒற்றை.. வெட்கத்தில் மனைவியை சுற்றிய கணவர்- வாய்ப்பை பயன்படுத்தி ஆடி தள்ளிய பெண்!!
நீயா நானாவில் கோபிநாத் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி பெண்ணொருவர் அவருடைய கணவருடன் நடனமாடியுள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஷோக்களில் ஒன்று நீயா நானா.
இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் பேச முடியாத அல்லது கேட்கப்பட வேண்டிய விடயங்கள் இரண்டு குழுக்களாக பிரித்து வாதாடுவார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சி பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குவதால் மக்கள் மத்தியில் நல்ல ரீச் இருக்கின்றது.
இந்த நிலையில், நீயா நானாவில் இந்த வாரம் டான்ஸ் ஆடும் பெண்களும் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஆண்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தார்கள்.
கணவர் முன் ஆடித் தள்ளிய மனைவி
அதில், தன்னுடைய கணவர் நா எப்படி நடனம் ஆடினாலும் அதனை கண்டுக் கொள்ளமாட்டார்..” என கணவரை கோபிநாத்திடம் மாட்டி விட்டுள்ளார்.
இதற்கு சரியான பதிலடிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்த கோபிநாத், கணவரையும் மனைவியும் அழைத்து நீயா நானா அரங்கத்தில் ஆட வைத்துள்ளார்.
இதற்காக படையப்பா திரைப்படத்திலிருந்து "சுற்றி சுற்றி வந்தீக.. " என்ற பாடல் போடப்பட்டது.
கணவருக்கு ஆட தெரியாவிட்டாலும் மனைவியின் சந்தோசத்திற்காக அவரும் தன்னால் முடிந்த முழு ஆதரவை கொடுத்திருந்தார்.
இந்த காட்சியை பார்க்கும் போது கணவன் - மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |