ஒரு கோடி ரூபாய்க்கு வீடு கட்டி கெத்து காட்டிய பெண்... பயங்கர அதிர்ச்சியில் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் வரவு எட்டணா செலவு பத்தணா என்ன காரணம்? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு வரவு எட்டணா செலவு பத்தணா என்ன காரணம்? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் கலந்து கொண்டுள்ள நடுத்தர மக்களின் வாழ்க்கை செலவு அளவுக்கு அதிகமாக செல்கின்றது. பெண் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது 19 ஆண்டுகள் ஆகியும் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
தனது கடின உழைப்பால் ஒரு கோடிக்கு வீடு கட்டியுள்ளார். இதற்கு காரணம் தன்னுடைய வைராக்கியம் என்று கூறி அரங்கத்தில் கெத்து காட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |