சினிமாவில் நடிகருக்கு ஏற்பட்ட மாரடைப்பு... நிஜத்தில் தாய் செய்யும் காரியம்! நீயா நானாவில் அவிழ்ந்த உண்மை
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் பெற்றோர் பிள்ளைகள்... என் பிள்ளைக்கு சாமர்த்தியம் போதவில்லை என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு என் பிள்ளைக்கு சாமர்த்தியம் போதவில்லை... பெற்றோர் பிள்ளைகள்.. என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாய் ஒருவர் தனது பிள்ளைகளை கபடி விளையாடி அனுமதிக்காமல் இருக்கின்றார். இதற்கு இவர் கூறும் காரணம் என்னவெனில், விளையாடி கடைசியில் வெற்றிபெறும் வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு அதிகமானோர் இறந்துவிடுவதாகவும், வெண்ணிலா கபடி குழு படத்திலும் இவ்வாறு நடந்ததாகவும் கூறியுள்ளார்.
குறித்த பெண்ணின் பேச்சைக் கேட்ட கோபிநாத் அது சினிமா மா என்று கூறி அரங்கத்தை சிரிக்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |