உனக்கு ஒன்னும் தெரியாது... வாயை மூடு என்று சொன்னது ஏன்? கோபிநாத் ஆவேசம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் பெற்றோர் பிள்ளைகள்... என் பிள்ளைக்கு சாமர்த்தியம் போதவில்லை என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு என் பிள்ளைக்கு சாமர்த்தியம் போதவில்லை... பெற்றோர் பிள்ளைகள்.. என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் பிள்ளைகள் சாமர்த்தியம் இல்லாமல் வெளி உலகில் இருப்பதை குறித்து பெற்றோர்கள் பேசியுள்ளனர்.
மற்றொரு ப்ரொமோ காட்சியில் பிள்ளைகள் ஏதாவது கருத்து கூறினால், உனக்கு ஒன்றும் தெரியாது வாயை மூடு என்று பெற்றோர்கள் கூறுவதை கோபிநாத் கண்டித்துள்ளார்.