தற்கொலை வரை சென்ற பெண்! நீயா நானாவில் கண்கலங்கிய கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் மனநிலை சிகிச்சைக்கு செல்வதை இயல்பாக எடுக்க முடியாது என்பவர்களும், மனநல சிகிச்சை இயல்பாக மாற வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு மனநிலை சிகிச்சைக்கு செல்வதை இயல்பாக எடுக்க முடியாது என்பவர்களும், மனநல சிகிச்சை இயல்பாக மாற வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இங்கு இளைஞர் ஒருவர் தனது மனநிலையை 21 வருடம் தெரிந்து கொண்ட எனக்கு தெரிவதை விட தன்னிடம் பேசும் 1 மணி நேரத்தில் மற்றவர்களால் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும். நானே என்ன மனநிலைக்கு சரியான தீர்வை கொடுப்பேன் என்று கூறியவரிடம் ஒரு நிமிடம் கோபிநாத் பொங்கி எழுந்து உன் Originality ல தீய வைக்க என்று கூறியுள்ளார்.
மற்றொரு பெண் 5 மாதத்திற்கு முன்பு தான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்ததாக கூறி அரங்கத்தை கண்கலங் வைத்துள்ளார்.
மற்றொருவர் தனது சகோதரியின் திடீர் மாற்றத்தினைக் கூறி கோபிநாத்தையே சங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளார். ஆனால் தற்போது அவரது சகோதரி மருத்துவ பரிசோதனை முடிந்து நன்றாக இருப்பதையும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |