ஆன்லைன் காதல் அவ்வளவு உண்மையல்ல! நீயா நானாவில் காரசாரமான விவாதம்
ஆன்லைனில் பண்ணும் காதல் எல்லாம் முற்றிலும் பொய்யானது என நீயா நானாவில் பெண்ணொருவர் கூறியுள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
ஆன்லைன் காதல்
இந்த நிலையில் ஆன்லைனில் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் உண்மையாக இருக்க மாட்டார்கள் என நீயா நானாவில் வாதாடப்படுகிறது.
மேலும் ஆன்லைன் காதலை விட நேரில் பார்த்து திருமணம் செய்துக் கொண்டாலும் பொய்யாக தான் இருக்கிறது என இன்னொரு தரப்பினர் வாதாடுகிறார்கள்.
அதில், “ ஆன்லைனில் பார்த்து திருமணம் செய்தால் அது அவ்வளவு தூரம் உண்மையாக இருக்காது.” என பெண்ணொருவர் கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மற்றுமொரு தம்பதியினர்,“ இவர் என்னை முழுமையாக காதலித்தார்” எனவும் கூறியிருக்கிறார்கள்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுவாரஸ்யமான விடயங்களை தொடர்ந்து ஷோவில் பார்க்கலாம்.