Neeya Naana: பாட்டு பாடும் பெற்றோரை விமர்சிக்கும் பிள்ளைகள்... கோபிநாத் கொடுத்த பதில் என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் பழைய பாடல்களை விரும்பி கேட்கும் பெற்றோர் மற்றும் விமர்சிக்கும் பிள்ளைகள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் பழைய பாடல்களை விரும்பி கேட்கும் பெற்றோர் மற்றும் விமர்சிக்கும் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்த பழைய பாடல்களை விரும்பி கேட்கும் நிலையில், பிள்ளைகள் அதனை விமர்சித்துள்ளனர்.
சந்தோஷம், சோகம் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கின்றது என்றும் தற்போதைய பாடல்களில் ஒரு வைப் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
பெற்றோர் குறித்த பாடலை பாட ஆரம்பித்ததும், பிள்ளைகள் அதனை நிறுத்தக் கூறுவதாக அரங்கத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |