Neeya Naana: மஞ்சும்மல் பாய்ஸை மிஞ்சிய 40 வயது அங்கிள்கள்! எச்சரித்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மஞ்சும்மல் பாய்ஸ் போன்று ஆர்ப்பாட்டமாய் ஊர் சுற்றும் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு மஞ்சும்மல் பாய்ஸ் போன்று ஆர்ப்பாட்டமாய் ஊர் சுற்றும் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
அதாவது சமீபத்தில் மலையாள மொழியில் வெளியான பரபரப்பான திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான கதையாகும்.
தங்கள் விடுமுறையைக் கழிக்க கொடைக்கானல் செல்லும்போது அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கிக் கொள்ளும்போது அவர்களின் விடுமுறை எதிர்பாராத திருப்பத்தை சந்திக்கும் கதையே இதுவாகும்.
இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளதுடன், தற்போது இப்படத்தில் குணா குகை மீண்டும் பிரபலமாகி வருகின்றது.
தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் மஞ்சும்மல் பாய்ஸ் போன்று அலப்பறை செய்யும் நண்பர்களால் பொதுமக்கள் படும் அவஸ்தையை விவாதித்துள்ளனர்.
இதில் எதிர்பாராத விதமாக கோபிநாத் 40 வயது அங்கிள்களை எச்சரித்த சம்பவம் மிகவும் தரமாக இருந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |