இவங்க தான் நடிகர் சந்தானத்தின் மனைவியா? வைரலாகும் புகைப்படம்
நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் சந்தானம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தொடங்கி ஹீரோவாக மாறியவர் தான் நடிகர் சந்தானம். அவ்வப்போது காமெடியிலும் கலக்கிவரும் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிகர் சந்தானம் 2004ம் ஆண்டு உஷா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் இவரது குடும்ப புகைப்படம் அவ்வளவாக வெளிவராத நிலையில், சில புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் காணப்படுகின்றது.
தற்போது இவரது திருமண புகைப்படமும், மனைவி மற்றும் குழந்தையுடன் உள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |