Neeya Naana: நகரத்தில் இல்லாத சந்தோஷம்! 100 சதவீதம் கிராமத்தில் கிடைக்கும்... நெகிழ்ச்சியில் மருத்துவர்
நீயா நானா நிகழ்ச்சியில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் மருத்துவருக்கு படித்துவிட்டு தந்தையின் ஆசைக்காக கிராமத்திற்கு வந்து குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்க்க வந்துள்ள நபர் தனது நிலையை மிக அழகாக அரங்கத்தில் கூறியுள்ளார்.
கிராமத்தில் வருமானம் குறைவு தான் ஆனால் நகரத்தில் அனுபவிக்க முடியாததை கிராமத்தில் அனுபவிப்பதாகவும், 100 சதவீதம் சந்தோஷமாக வாழ்வதாக கூறியுள்ளார்.
மேலும் கிராமத்தினர் உறவினர்களாக மாறி தனது குடும்பமாகவே தங்களை பார்ப்பதாக கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |