மகளை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்... இப்பவே இவ்வளவு ஸ்டிரிக்டா?
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராதனாவை மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய்
உலக அழகியாகவும், நடிகையாகவும் அறியப்படும் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2011ம் ஆண்டில் ஆராத்யா என்ற மகளும் பிறந்தார்.
இவர்களின் குடும்பமே நட்சத்திர குடும்பம் என்பதால், வெளியிடங்களுக்கு சென்றுவிட்டால், மீடியாவின் கமெரா இவர்களை சுற்றியே தான் இருக்கும்.

ஆனால் மகள் ஆராத்யா புகைப்படம் எடுக்க வரும் நபர்களிடம் தந்தை அபிஷேக் பச்சன் ஏதாவது கூறி அவர்களை தட்டிக் கழிப்பார். தற்போது 14 வயதாகும் ஆராதானை பள்ளியில் படித்து வருகின்றார்.
இவரும் நடிப்பில் ஆர்வம் கொண்டுள்ள நிலையில், பள்ளியில் நடைபெற்ற நாடக நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெறவும் செய்கின்றார்.

கட்டுப்பாடுடன் வளர்க்கப்படும் மகள்
வெளியிடங்களுக்கு சென்றால் மகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் கூட அவருக்கு கற்றுக்கொடுத்துள்ளனர் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தம்பதிகள்.
ஆராத்யாவும் வெளியிடங்களுக்கு வந்தால் பணிவுடனே நடந்து கொள்வாராம். தற்போது இளமை பருவத்திற்கு செல்லும் இவர் தனது உணர்வுகள், எண்ணங்கள் எதையும் பெற்றோரிடம் மறைப்பதில்லையாம்.

பெற்றோரும் ஆராத்யாவிற்கு என தனியாக மொபைல் கொடுத்து இன்னும் பழக்கவில்லையாம். பாட சம்பந்தமாக ஏதாவது பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்றால் ஐஸ்வர்யா ராய் மொபைலுக்கு தான் போன் வருமாம்.
அவரது பெயரில் சமூக வலைத்தளங்களில் கணக்கு கூட வைத்திருக்காத ஆராத்யா, நண்பர்களுடன் அம்மாவின் மொபைல் மூலமாகவே பேசுகின்றாராம்.
இணையத்தினை உபயோகிப்பதற்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆராத்யாவும் தேவையற்ற விடயங்கள், சர்ச்சைகள் இவற்றினை சமூக வலைத்தளங்களில் பார்க்க மாட்டாராம். இவ்வாறு பார்ப்பதும் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |