Neeya Naana: 75 ஆயிரம் சம்பளம் வாங்கியவர் சோம்பேறியா? பெண் விட்ட வார்த்தைக்கு கோபிநாத்தின் பதில் என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் Home Maker-ஆகவே இருக்க விரும்புகிறேன் என்று சொல்லும் படித்த பெண்கள் மற்றும் அவர்களின் முடிவு சரியானது அல்ல என்று எதிர்க்கும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் Home Maker-ஆகவே இருக்க விரும்புகிறேன் என்று சொல்லும் படித்த பெண்கள் மற்றும் அவர்களின் முடிவு சரியானது அல்ல என்று எதிர்க்கும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் வேலைக்கு சென்ற பெண்கள் அதனை நிறுத்திவிட்டு Home Maker-ஆக இருக்கின்றனர். இதனை தவறு என்று எதிரே இருப்பவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
75 ஆயிரம் சம்பளம் வாங்கிய பெண் அதனை விட்டு விட்டு தனது குழந்தைக்காக வீட்டில் இருக்கின்றார். இதுதான் தனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
பெண் ஒருவர் தனது வீட்டில் இருக்கும் அனுபவத்தைக் குறித்து பேசியுள்ளார். இதற்கு எதிரே அமர்ந்திருந்த பெண் ஒருவர் சோம்பேறியா இருப்பதற்கு Home Maker என்று பெயர் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
இன்ஜினியரிங் முடித்த பெண் வேலைக்கு செல்லாமல் தனது கணவரை பார்த்து பார்த்து கவனித்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை கேட்ட கோபிநாத் பொறாமையில் பொங்கி எழுந்துள்ளார்.
படிப்பது அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவே தவிர சம்பாதிக்காக அல்ல... பயன் மட்டும் தான் கல்வி கிடையாது... பகுத்தறிவும் தான் கல்வி என்று காரசாரமான விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கறிஞருக்கு படித்த பெண் தான் வீட்டில் இருப்பது தான் சந்தோஷம் என்று கூறிய நிலையில், கோபிநாத் சில கேள்வியை கேட்டு குறித்த பெண்ணின் படிப்பினை சோதித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |