Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர்
நீயா நானா நிகழ்ச்சியில் என்னை விட குழந்தைக்கு தான் அதிக செல்லம் என பொறாமைப்படும் மனைவி மற்றும் கணவர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் என்னை விட குழந்தைக்கு தான் அதிக செல்லம் என பொறாமைப்படும் மனைவி மற்றும் கணவர் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் குழந்தை பிறப்பதற்கு முன்பு தன் மீது வைத்திருந்த பாசம் குறைந்துவிட்டதாகவும், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால் தன்னை கண்டுகொள்வதில்லை என்றும் தனது குழந்தையை தான் முதலாவதாக தேடுகின்றார் என மனைவி புலம்பியுள்ளார்.
மற்றொருவர் பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்கால் பரிதாப நிலைக்கு சென்றுள்ளார். அதாவது தன்னை செல்லமாக அழைக்கும் பெயரையே கேக்கில் வைக்கவில்லை என கூறியுள்ளார். இதற்கு கோபிநாத் எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போயுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |