Siragadikka Aasai: விஜயாவை ஏமாற்றி வீட்டை அபகரிக்கும் சிந்தாமணி... சிக்கலில் அண்ணாமலை
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக அண்ணாமலைக்கு தெரியாமல் விஜயா வீட்டை அடமானம் வைத்துள்ள சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பலநாள் மறைத்து வைக்கப்பட்ட ரோகினியின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் மனோஜிடம் ரோகினிக்கு விவாகரத்து கொடுக்க விஜயா கூறியுள்ளார். இதுவரை கூட்டுக்குடும்பமாக வாழ்வதற்கு ஆசைப்பட்ட ரோகினி விஜயாவிடம் மனோஜை பிரிப்பதற்கு முயற்சிக்கின்றார்.

மேலும் மீனா முத்து இருவரையும் பழிவாங்குவதற்காக சதிவேலையை செய்ய உள்ளார். நீதிமன்றத்திலும் தனது நாடகத்தினை அம்பலப்படுத்தி விவாகரத்து கொடுக்கவிடாமல் தடுத்துள்ளார்.
இந்நிலையில் மனோஜின் கடனை அடைப்பதற்கு விஜயா வீட்டு பத்திரத்தினை அண்ணாமலைக்கு தெரியாமல் அடகு வைப்பதற்கு கொண்டு வந்துள்ளார்.
அண்ணாமலையின் கையெழுத்தினை இரவு முழுவதும் போட்டுப்பார்த்து மனோஜ் அப்பாவின் கையெழுத்தினை அவரே போட்டுள்ளார்.
சிந்தாமணி நினைத்தது போன்று வீடு அடமானத்திற்கு வந்த நிலையில், வீட்டை தன்வசப்படுத்த ஆசையாக காத்திருக்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |