Neeya Naana: அரங்கத்தில் பாடகரான கோபிநாத்... பெண்ணிற்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி
நீயா நானா நிகழ்ச்சியில் விதவிதமான therapy மையம் நடத்துபவர்கள் மற்றும் அதனை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் விதவிதமான therapy மையம் நடத்துபவர்கள் மற்றும் அதனை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தெரபி என்ற பெயரில் பணம் சம்பாதிப்பவர்களை பார்த்து எதிரே இருப்பவர்கள் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
வித விதமான செயல்களை செய்து நோய்களுக்கு தீர்வு என்று கூறுவதை தாங்கிக் கொள்ள முடியாத எதிர்தரப்பினர் ஒரு தருணத்தில் கொந்தளித்துள்ளனர்.
இதில் நடந்த டுவிஸ்ட் என்னவென்றால் கோபிநாத் பெண் ஒருவருக்கு கடல் அலை சத்தத்துடன் தன்னுடைய குரலால் பாடலைப் பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |