எனக்கே உங்களை தெரியாது! அரங்கத்தில் பாடிய பாடகிக்கு ஷாக் கொடுத்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் சினிமா பட பாடகர்கள் மற்றும் இசை ரசிகர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு சினிமா பட பாடகர்கள் மற்றும் இசை ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் மிக நல்ல பாடல்களை பாடிய பாடகர்கள் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிலையில், இதில் கோபிநாத்துக்கே தெரியாத பல பாடகர்கள் இருக்கின்றனர்.
ஏலேலோ... ஏ... ஏலேலோ... என்ற பாடலை பிரியா பிரகாஷ் என்பவர் பாடிய நிலையில், அரங்கத்தில் அவர் அதே பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை நான் தான் படினேன் என்று எத்தனை பேருக்கு தெரியுங்கிறது எனக்கு தெரியாது என்று கூறினார்... இதற்கு கோபிநாத் எனக்குமே தெரியாது என்று கூறியுள்ளார்...