நீயா நானா அரங்கில் இளவட்டக்கல்லை தூக்கிய கோபிநாத்... சிரிக்க வைக்கும் அசத்தல் ப்ரொமோ
நீயா நானா நிகழ்ச்சியில் உழவர் தின சிறப்பாக தமிழக வீர விளையாட்டு... நட்சத்திரங்கள் மற்றும் இளைஞர்கள் என்ற தலைப்பில் அட்டகாசம் செய்துள்ளனர்.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் பொங்கல் திருநாள் வருவதால் அதற்கான சிறப்பு நிகழ்ச்சியினை நீயா நானா அரங்கத்தில் கலகலப்பாக விளையாடப்படுகின்றது.
உழவர் தின சிறப்பாக தமிழக வீர விளையாட்டு... நட்சத்திரங்கள் மற்றும் இளைஞர்கள் என்ற தலைப்பில் எழுந்துள்ள நிகழ்ச்சியில் இளவட்ட கல்லை பிரபலங்கள் தூக்க முயற்சித்த நிலையில், இறுதியில் கோபிநாத்தையே தூக்க வைத்துள்ளனர்.
ஆனால் இதில் ஒரு டுவிஸ்ட் என்னவெனில் கோபிநாத் தூக்குவதற்கு ஸ்பெஷலாக வெள்ளைநிறத்தில் இளவட்ட கல் என்று கொண்டுவரப்பட்டு பாகுபலி தோரணையில் தூக்கி அசத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |