காதல் திருமணம் செய்துவந்த மருமகளால் கண்ணீர் வடிக்கும் மாமனார்! வெளியான பல உண்மைகள்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் காதல் திருமணம் செய்து வந்த மருமகள்கள் மற்றும் மாமனார் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு காதல் திருமணம் செய்து வந்த மருமகள்கள் மற்றும் மாமனார் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னையே வீட்டிற்கு வந்த மருமகள் கண்கலங்கி அழ வைத்ததாக நபர் ஒருவர் கூறியுள்ளார்.
மற்றொருவர் வெளியே செல்லும் செலவிற்கு பணம் வேண்டுமா மாமா என்று கேட்கும் மருமகளிடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்வாராம். அங்கு பெட்ரோல் போடும் போது பார்த்தால் தினமும் பாக்கெட்டில் 3000 அல்லது 4000 ரூபாய் ஏற்கனவே வைத்திருப்பார் என்று கூறி கலங்கியுள்ளார்.
மற்றொரு மாமனார் தனது மருமகள் துணி என்றும் பார்க்காமல் வேலை செய்வதாக கூறியுள்ளார். அதற்கு அந்த மாமனார் நான் முடியாத நிலையில், என்னை பாத்ரூம் வரை அழைத்துச் சென்ற எனது மருமகளுக்கு நான் செய்கின்றேன் என்று கூறியுள்ளார்.