சீர் கொடுத்த கோபிநாத்! பெண்ணின் நகைக்கு ஆசைப்பட்ட இளைஞர்...நீயா நானா ஷோவில் சுவாரஸ்யம்!
நீயா நானா நிகழ்ச்சியில் வாரந்தோறும் நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல விஷயங்களை விவாதப் பொருளாக கொண்டு தொகுப்பாளர் கோபிநாத் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த வாரமும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பான விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு தான் நகைப்பிடிக்கும்.
ஆனால் ஆண்களுக்கும் நகை மீது அதிக ஈர்ப்பு உள்ளது என்பதை நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தங்க நகை அணிந்து வந்த பெண்கள் சிலரது நகைகளை சில ஆண்கள் தங்களுக்கு பிடித்துள்ளதாக கூறுகின்னர்.
அதற்கான காரணத்தையும் கூறுகின்றனர். அதேசமயம், நபர் ஒருவர் பெண் ஒருவரை காட்டி அவர் அணிந்திருக்கும் தங்க மீன் செயின் பிடித்துள்ளதாக கூறுகின்றார்.
உடனே அந்த பெண்னை அழைத்து அவர் கலுத்தில் உள்ள தங்க செயினை கழட்டி அந்த நபருக்கு போட்டு அழகு பார்க்கின்றார்.
பின்னர் பெரிய நகையை கழட்டி கொடுத்து இது அண்ணனுடைய சீரு வைத்து கொள் என்று கோபிநாத் குறிப்பிடடுகின்றார்.
இந்த வாரம் மிகவும் விறுவிறுப்புடன் கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சி சென்றது.