Neeya Naana: என்னது உடம்பில் 55 டாட்டூவா? வாயடைத்துப் போன கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் அதிகம் Tattoos போட்டுக்கொண்ட பெண்கள் மற்றும் Tattoos போட்டுக் கொள்வது சரியான போக்கு இல்லை என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் அதிகம் Tattoos போட்டுக்கொண்ட பெண்கள் மற்றும் Tattoos போட்டுக் கொள்வது சரியான போக்கு இல்லை என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இன்றைய காலத்தில் பெண்களில் பலர் உடலில் டாட்டூ போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவை தங்களது விருப்பம், செயல்பாடு என்று கூறிக்கொண்டாலும், அதிகமான டாட்டூ போட்டுக்கொண்ட பெண்களை மற்றவர்கள் பார்க்கும் போது சற்று முகத்தை சுழிக்கவும் செய்கின்றனர்.
இங்கு பெண் ஒருவர் 55க்கும் மேற்பட்ட டாட்டூ போட்டிருப்பதாக பெண் ஒருவர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட கோபிநாத் என்னது? என்று எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் காணப்படுகின்றார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |