நா எட்டு நண்பர்களுடன் தான் ஹனிமூன் சென்றேன்! வார்த்தையால் கணவரை வறுத்து எடுத்த கோபிநாத்
என்னுடைய ஹனிமூனுக்கு சுமார் 8 பேருடன் தான் சென்றேன் எனக் கூறிய பெண்ணின் கதையை கேட்டு அவரது கணவரை சரமாரியாக வறுத்தெடுத்துள்ளார் நீனா நானா கோபிநாத்.
நீயா நானா கோபிநாத்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் நிகழ்ச்சியில் ஒன்று நீயா நானா.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
சமூகத்துக்கு தேவையான கருத்துகளை காரசாரமாக விவாதிப்பதால் இன்னும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது நீயா நானா.
இந்நிலையில் நீயா நானா ஷோவில் திருமண நாளில் உங்களால் மறக்க முடியாத விடயம் என்ற கேள்விக்கு ஒரு பக்கம் மனைவிமார்களும், இன்னொரு பக்கம் கணவர்மார்களும் அமர்ந்து மிகவும் விறுவிறுப்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், அதில் ஒரு தம்பதியினரிடம் இந்த கேள்வியை கேட்ட போது அவர்கள் கூறிய பதில் முழு அரங்கத்தையும் வியப்படைய வைத்துள்ளது.
நான் 8 பேருடன் தான் ஹனிமூன் சென்றேன்
அது என்னவென்றால், "தன்னுடைய திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்ற போது தங்களுடன் சுமார் 8 நண்பர்கள் வந்ததாகவும், எப்போதும் வெளியில் சென்றாலும் தன்னுடைய நண்பர்களை அழைத்து தான் செல்வதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு கணவர், வெளியில் செல்வது என்பதே ஒரு சந்தோசத்திற்காக தானே, அதான் என்னுடைய நண்பர்களையும் சேர்த்துக் கொள்கிறேன் என பதிலளித்துள்ளார்.
இதனை கேட்ட கோபிநாத், குழந்தை மற்றும் மனைவியுடன் பக்கத்திலிருந்து எப்படி சந்தோசமாக இருப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.“ மகிழ்ச்சி என்பது நம்முடன் தான் இருக்கிறது” என கணவருக்கு புரிய வைத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ இது போல் நாம் விடும் சிறு தவறுகள் தான் நம்மை குடும்ப வாழ்க்கைக்கு பிரச்சினையாக வருகிறது” பல அனுபவங்களுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.