Neeya Naana: 10 லட்சம் சம்பளம் கொடுத்த வேலையை விட்ட பெண்... நிசப்தத்தில் அரங்கம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் கார்ப்ரேட் கம்பெனி வேலையை விட்டுவிட்டு வேறு தொழில் செய்பவர்கள் மற்றும் வெளியேறுவது சரியான முடிவு அல்ல என்பவர்கள் இடையே விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு கார்ப்ரேட் கம்பெனி வேலையை விட்டுவிட்டு வேறு தொழில் செய்பவர்கள் மற்றும் வெளியேறுவது சரியான முடிவு அல்ல என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண் ஒருவர் 10 லட்சம் சம்பளம் தந்த வேலையை விட்டுவிட்டு வேறு தொழில் செய்வதாக கூறியுள்ளார்.
அங்கு விடுமுறை இல்லை... வேலை அதிகம் என்று கூறி மற்றொருவர் வைத்த குற்றச்சாட்டுக்கு பெண் ஒருவர் சரியான பதில் கொடுத்து அரங்கத்தையே நிசப்தத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |