Neeya Naana: அய்யய்யோ நிகழ்ச்சியை நிறுத்திடுங்க... பெண்ணின் பதிலால் அரண்டு போன கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் கிராமத்தை பூர்வீகமாய் கொண்ட நகரத்து பெண்கள் மற்றும் கிராமத்து பசங்க என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் காதல் கிராமத்தை பூர்வீகமாய் கொண்ட நகரத்து பெண்கள் மற்றும் கிராமத்து பசங்க என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் நகரத்து பெண்கள் தங்களிடம் வந்து பேசுவதை தங்களால் நம்பமுடியவில்லை என்றும் அவர்களின் செயல்பாட்டில் வித்தியாசம் தெரிவதாக இளைஞர்கள் கூறுகின்றனர்.
அதுவே பெண்கள் முன்பு இருந்தது போன்று எதார்த்தமாக கிராமத்திற்கு சென்றால் அவர்களிடம் பேச முடியவில்லை. காரணம் அவர்கள் காதல் என்று எதாவது கூறிவிட்டால் அவர்களை தவிர்ப்பது கஷ்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
என்னதான் நகரத்தில் வாழ்ந்தாலும், அவர்களின் ரசனை தற்போதைய பட பாடல்களில் இல்லாமல் 90காலத்தில் உள்ள பாடல்களையே ரசிக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |