பெட்ரோல் பங்கில் வேலை செய்த நடிகர் அப்பாஸ்.... இப்போ என்ன செய்றார்னு தெரியுமா?
நடிகர் அப்பாஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் வேலை செய்த நிலையில், தற்போது வெளிநாட்டில் மிக உயர்ந்த அரசாங்க பதவியில் இருப்பதாக கூறியுள்ளார்.
நடிகர் அப்பாஸ்
தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டங்களில் உச்ச நடிகராக வலம்வந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் 1996ம் ஆண்டு காதல் தேசம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களில் நடித்து அசத்தியுள்ளார். சாக்லேட் பாய் என்று ரசிகர்களின் மனதை கவர்ந்த அப்பாஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் வேலை செய்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆனால் பெட்ரோல் பங்கில் வெறும் 10 நாட்கள் மட்டுமே வேலை செய்ததாகவும், தனக்கு அது செட் ஆகவில்லை என்பதால் விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
அதன் பின்பு கால்சென்டர் ஒன்றிலும் வேலை செய்த அனுபவமும் உள்ளதாகவும், என்ன வேலையாக இருந்தாலும் தனக்கு பிடித்த மாதிரியாக இருக்கனும் என்பதை அதிகமாக விரும்புகின்றார்.

தற்போது என்ன செய்கின்றார்?
இந்நிலையில் அப்பாஸ் யூடியூப் சேனல் ஒன்றில் கூறுகையில், தற்போது தான் நியூசிலாந்தில் அரசு வேலை செய்து வருவதாகவும், பலருக்கும் இது தெரியாது என்று கூறியுள்ளார்.
தற்போது வேலை செய்து இடையில் நேரம் கிடைக்கும் போது சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதாக கூறியிருக்கின்றார்.

90களில் இவரது ஹேர்ஸ்டைலை, ஸ்டைல் போன்றவை இளைஞர்களிடையே ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது. ரம்பா குறித்து பேசுகையில், எப்பொழுதும் டயட் என்று தான் இருப்பார்... தான் வேண்டும் என்றே அவரிடம் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கடுப்பேற்றுவதாக கூறியுள்ளார்.
சிம்ரன் குறித்து பேசுகையில், காதல் காதல் காதல் என் கண்ணில் மோதல் என்ற பாடலுக்கு நடனமாடியதை பார்க்கும் போது இவ்வளவு எனர்ஜியுடன் நான் நடனமாடினேனா? என்ற கேள்வி எழுவதாக கூறியுள்ளார். தற்போது நியூசிலாந்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |