நீயா நானாவின் சிறந்த தந்தை! சர்ச்சைக்குள்ளான விக்னேஷ் சிவனின் ட்வீட்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நீயா நானா நிகழ்ச்சியில், சிறந்த தந்தையாக காணப்பட்ட நபரை பாராட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் வேலைக்கு செல்லும் மனைவி, வீட்டில் இருக்கும் கணவர் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தந்தை என்று ஒருவருக்கு நிகழ்ச்சியின் இடையிலேயே கோபிநாத் பரிசு கொடுத்து அனைவரையும் வாயடைக்க வைத்தார்.
குறித்த தம்பதிகள் பற்றி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விக்னேஷ் பதிவிட்ட கருத்து
இந்த சம்பவத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உணர்வுபூர்வமான கேப்ஷனையும் சேர்த்துள்ளார்.
அதில் தங்க மீன்கள் படத்தில் வரும் வசனம் ஒன்றை எழுதியுள்ளார், அவர் பதிவில் 'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று' என்று பதிவிட்டிருந்தார்.
இந்த கேப்ஷனை கண்ட தமிழ் பித்தர்கள் பலர் 'முத்தம் காமத்தில் சேர்ந்தது' என்பது போன்ற தவறான அர்த்தத்தை புரிந்துகொண்ட விக்னேஷ் சிவனை வசைபாட தொடங்கினர்.
ஆனால் அவர் எழுதியிருந்தது 'காமத்தில் சேர்ந்ததில்லை' என்று தான், இதனை தவறாக புரிந்துகொண்ட சிலருக்கு விளக்கமும் தரப்பட்டு இருக்கிறது.
❤️❤️❤️❤️❤️ மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று ❤️???? https://t.co/AR4Z9pHaV3
— Vignesh Shivan (@VigneshShivN) September 12, 2022