Neeya Naana: போர்வை மடிப்பது எப்படி? கோபிநாத் கொடுத்த ரியாக்ஷன்
நீயா நானா நிகழ்ச்சியில் அதிகமாக சுத்தம் பார்க்கும் நபரால் வீட்டில் உள்ள சக நபர்கள் படும் அவஸ்தையை நீயா நானாவில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் வீட்டில் அதீத சுத்தம் பார்ப்பவர்கள் மற்றும் குடும்பத்தில் அதை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண் ஒருவர் சுத்தம் பார்ப்பதாக கூறி வாசலில் போட்டுள்ள கால்மிதியை கூட அழுக்காக விடமாட்டாராம். மேலும் வெளியே எடுத்துச் செல்லும் குடை மழையில் நனையாமல் இருக்க வேண்டுமாம்.
பின்பு கோபிநாத் அப்பெண்ணிற்கு கைகொடுத்த நிலையில் கை அழுக்காகிவிடாமல் என்று கூறி கலாய்த்துள்ளார்.
மற்றொரு தம்பதிகள் போர்வையை மடிப்பதைக் கூட சரியாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் குறித்த பெண் போர்வையை மடித்து காட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |