Neeya Naana: நீயா நானாவில் மச்சினிகளுக்கு வந்த ஆசை- ஊட்டி விட்டு அழகு பார்த்த கோபிநாத்
போட்டியாளர்கள் செய்த அலப்பறையில் கோபிநாத் ஷோவை விட்டு ஓடும் முடிவுக்கு வந்துள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.
தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும்.
இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
அக்கா கணவரை கலாய்க்கும் மச்சினிகள்
இந்த நிலையில் இந்த வாரம், புதுமண தம்பதிகளும், அவர்களை வம்பிழுக்கும் மச்சினிகளும் இருத்தரப்பினராக களமிறங்கியிருக்கிறார்கள்.
அதில், “ அக்காவின் பழைய நினைவுகள், மற்றும் அக்காவின் கணவரை என்னவெல்லாம் பண்ணலாம் என மச்சினிகள் நினைத்து வைத்திருந்தார்களோ? அந்த விடயங்கள் அனைத்தும் கோபிநாத் முன்னிலையில் செய்யப்பட்டன.
அதிலும் குறிப்பாக அக்காவின் கணவர்களை அழைத்து தனியாக அமர வைத்து இனிப்புக்களை கோபிநாத்துடன் சேர்ந்து ஊட்டி விட்டு அழகு பார்த்துள்ளனர்.
அத்துடன் நிறுத்தாமல் அக்காவின் கணவர்கள் அக்காக்களுக்கு எழுதிய கவிதைகளும் ஓபனாக சொல்லப்பட்டுள்ளது. சில கவிதைகளை கேட்டு கோபிநாத்தே வாயடைச்சி போயுள்ளார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் அனைத்தும் புன்னகையுடனே வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |