காலங்காலமாக பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் பொக்கிஷம்.. வரலாறு கேட்டு ஆடிப்போன கோபிநாத்
பாரம்பரியமான நகைகளின் பெயர்களை கேட்டு நீயாநானா கோபிநாத் வாயடைத்து போயுள்ளார்.
நீயாநானா
கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட முதல் இன்று வரை தொகுப்பாளராக கோபிநாத் இருந்து வருகிறார்.
சமூகத்தால் இன்று வரை தீர்க்கப்படாத பிரச்சினைகள், சமூகத்திற்கு தேவையான வாதங்கள் ஆகியன இந்த அரங்கில் வாதிடப்படும்.
மேலும் குறிப்பிட்டதொரு தலைப்பின் கீழ் வாதிடாமல் எல்லா தலைப்புகளின் கீழும் இங்கு வாதங்கள் இடம்பெறும்.
பிரச்சினைகள் இருதரப்பிலிருந்தும் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகளை போட்டியாளர்களின் வாயிலிருந்தே வெளிவர வைப்பது தான் கோபிநாத்தின் நுட்பமாக பார்க்கப்படுகின்றது.
150 வருட பழமையான நகையா இது?
இந்நிலையில், இந்த வாரம் பாரம்பரிய நகைகளுக்கும், நவீன நகைகளுக்கும் என்ன வித்தியாசம் என்ற தலைப்பிற்கு கீழ் வாதிடவுள்ளனர்.
இதற்கான ப்ரோமோக்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மூதாட்டியொருவர் பராம்பரிய நகைகளில் பெயர்கள் அதன் சிறப்பு, எப்போது வடிவமைக்கப்பட்டது என்பது பற்றி கூறுகிறார்.
தொடர்ந்து, போட்டியாளர்களின் கருத்துக்களை கேட்ட கோபிநாத் வியந்து போனதுடன் நகைகளின் வரலாற்றையும் கேட்டு தெரிந்து கொள்கிறார்.
நகைகளின் வரலாற்றை தெரிந்து கொண்ட பின்னர், “ இலட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து நகைகள் வாங்க அவசியமில்லை..” என நவீன நகைகளை அணிந்திருக்கும் தரப்பு பேச ஆரம்பிக்கின்றனர். இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் சுவாரஸ்யமாக்கப்பட்டுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |