உங்க போதைக்கு எங்களை இழுக்காதீர்கள்... பாகிஸ்தான் வீரரின் விமர்சனத்திற்கு நீரஜ் சோப்ரா விளக்கம்!
நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சரித்திரம் படைத்தார். 121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் கிட்டிய முதல் தங்கப்பதக்கம் இது தான்.
இதனால் பாராட்டுகளால் திகைத்து போன நீரஜ் சோப்ராவுக்கு ரூ.15 கோடி வரை பரிசுமழை கொட்டியது. இதனிடையே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பைனலில் ஈட்டி எறியத் தயாராக இருந்தேன்.
அப்போது எனது ஈட்டியை காணவில்லை. பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், அதை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்து வாங்கிய பிறகு, முதல் வாய்ப்பில் அவசரம் அவசரமாக எறிந்தேன்,' என்றார்.
உடனே சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் வீரரின் செயலை பலரும் விமர்சிக்கத் துவங்கினர். இதுகுறித்து நீரஜ் சோப்ரா வெளியிட்ட வீடியோவில். அர்ஷத் தவறாக எதுவும் செய்துவிடவில்லை. போட்டிக்கு முன் ஒருவரது ஈட்டியை, மற்றொரு வீரர் சோதித்து பார்ப்பது இயல்பான ஒன்று தான். ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் இருக்க விளையாட்டு எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
சமீபத்திய எனது கருத்துக்களுக்கு, பதில் தெரிவிக்கும் வகையில் வெளியான பதிவுகளால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். எனது பெயரை வைத்து தற்போது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்குவது வேதனை அளிக்கிறது.
தயவு செய்து இந்த விஷயத்தை விவகாரமாக்காதீர். ஈட்டி எறிதல் வீரர்களாகிய எங்களிடையே நல்ல நட்புறவு உள்ளது. ஒருவருக்கொருவர் சகஜமாக பேசிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
मेरी आप सभी से विनती है की मेरे comments को अपने गंदे एजेंडा को आगे बढ़ाने का माध्यम न बनाए। Sports हम सबको एकजूट होकर साथ रहना सिखाता हैं और कमेंट करने से पहले खेल के रूल्स जानना जरूरी होता है ?? pic.twitter.com/RLv96FZTd2
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 26, 2021