36 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகைக்கு 49 வயதில் திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?
3 முறை தேசிய விருது வென்ற பிரபல நடிகை திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொண்டு, தன்னுடைய 49ஆவது வயதில் திருமணம் செய்து கொண்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நீனா குப்தா
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தான் நடிகை நீனா குப்தா.
இவர், கொல்கத்தாவில் பிறந்து 1982 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம் 'சாத் சாத்' மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
இதனை தொடர்ந்து ஒரே வருடத்தில் 6 படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இந்திய சினிமாவின் மூத்த நடிகை மட்டுமல்ல, திறமையான நடிகையாகவும் பார்க்கப்படுகிறார். இவரின் நடிப்பு திறமைக்கு ஏற்ப இதுவரையில் 3 முறை தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதன்படி, கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'தி லாஸ்ட் கலர்', 'பதாய் ஹோ' ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். பட வாய்ப்பு இல்லாத நாட்களில் சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.
திருமண வாழ்க்கை
சினிமாவில் இவ்வளவு பிரபலமாக இருக்கும் நீனா குப்தா, தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறார். நீனா தன்னுடைய 36 வயதில் திருமணம் ஆகாமலேயே தாயானார்.
பாலிவுட் நடிகையான நீனா குப்தா இரண்டு முறை திருமணம் செய்துகொண்டிருந்த பொழுதும் அந்த திருமண வாழ்க்கையில் குழந்தை பிறக்கவில்லை. கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் செய்துகொண்டவர் நீனா, விவாகரத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இப்படி இருக்கும் பொழுது கடந்த 1980ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் வந்தது. அப்போது நீனா குப்தா, மும்பையில் நடந்த ஒரு விருந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் விவியன் ரிச்சர்ட்ஸை முதல் முறையாக சந்தித்திருக்கிறார்.
மகளின் விவாகரத்து
இந்த சந்திப்பின்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட இருவரும் 1980களில் டேட்டிங்கில் செய்தனர். விவியன் ரிச்சர்ட்ஸுடன் திருமணம் செய்துகொள்ளமால் வாழ்ந்து வந்த நிலையில் நீனா குப்தா அவர் மூலம் பெண் குழந்தையொன்றை பெற்றுக் கொண்டார்.
அப்போது இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. எனினும், விவியன் ரிச்சர்ட்ஸை நீனா குப்தா திருமணம் செய்யவில்லை. ஏனென்றால், விவியன் ரிச்சர்ட்ஸ் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார்.
அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்ய மறுக்கவே, நீனா குப்தா சிங்கிள் மதராக இருந்து, தன்னுடைய பெண் குழந்தையான மசபா குப்தாவை வளர்த்து வந்தார். தற்போது மசபா குப்தா திருமணமாகி, அவரும் விவாகரத்து வாங்கி விட்டார்.
49 வயதில் மூன்றாவது திருமணம்
இதற்கிடையே, நீனா குப்தா தனது 49வது வயதில் டெல்லியைச் சேர்ந்த பட்டய கணக்காளரான விவேக் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது வரை ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
திருமண வாழ்க்கை நன்றாக அமைந்து விட்டதால் நீனா குப்தா தொடர்ந்து திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |