பார்த்தாலே பயன் தரும் வேப்ப மரம்... அனைத்து நோய்களுக்கும் தீர்வு கொடுக்குமா?
காற்றிலேயே கிருமிகளை அழிக்கும் வல்லமை படைத்த வேப்ப மரத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகின்றது. வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும்.
இந்த காற்றை சுவாசிப்பதாதே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக் கூடியது. வேப்பங் குச்சியால் தினந்தோறும் பல் துலக்கினால் பற்கள் வலிமை பெறுவதோடு, ஈறுகள் பிரச்சனையும் இருக்காது.
கோடை காலத்தில் வேப்ப மரங்கள் தழைத்து வளருகின்றன. வேப்பமரங்களை தினந்தோறும் பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். வேப்பிலை சாற்றில் உள்ள கசப்பு சுவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
தினசரி வேப்ப இலைகளை...
இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும்.
வேப்ப மரத்தின் இலைகள் அளப்பரிய மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளது.
தினசரி வேப்ப இலைகளை பயன்படுத்துவதன் மூலம் செரிமானத்தைத் தூண்டுகிறது, வயிற்று உபாதைகளைச் சரி செய்ய உதவுகிறது, குடல் புழுவை அழிக்கிறது.
மேலும் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளைப் போக்குவதுடன் பசியின்மையைப் போக்கவும் அம்மை நோயை குணப்படுத்தவும் இருதயத்தைப் பலப்படுத்தவும் துணைப்புரிகின்றது.
உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும் சக்தி வேப்பம் பூவுக்கு உள்ளது. கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.
வேப்பிலை சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும பருக்கள், கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |