கூந்தல் உதிர்வுக்கு முடிவுகட்டும் வெந்தயம்..இப்படி பயன்படுத்தி பாருங்க
முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பது முக்கியம்.
ஏனெனில் முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது.
தற்போது சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழக்கம் ஆகியவற்றின் மூலம் முடி அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. இதனால் கூந்தல் வறட்சியடையடைகின்றது.
இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க வீட்டில் உள்ள ஒரு பொருள் மிகவும் பயன்னுள்ளதாக அமையும் அது தான் வெந்தயம்.
இந்த ஒரு பொருளே போதும் கூந்தல் தொடர்பான ஏறாளமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் வெந்தியத்தில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, சி மற்றும் கே, பொட்டாசியம், இரும்பு, ஆகிய ஊட்டச்சத்துக்களுடன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் நிறைந்து காணப்படுகின்றது.
முடி உதிர்வை தடுக்க...
வெந்தயம் முடி உதிர்வை தடுக்கவும் கூந்தலை அடர்த்தியாக்கவும் பளபளப்பாக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
வெந்தய ஹேர் மாஸ்க் வறண்ட கூந்தலை மென்மையாக்க உதவுகின்றது.
இதற்கு ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் வெந்தயத்தை அரைத்து சேர்க்கவும்.
அதனுடன் ஒரு தே.கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து இந்த ஹேர் மாஸ்க்கை தலையில் தடவி 30 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவினால் கூந்தல் பட்டு போல் மென்மையாகிவிடும்.
வெந்தயம் மற்றும் எலுமிச்சை சாறுடன் அரைத்து, கூந்தலில் தடவி 20 நிமிடம் உலரவிட்டு கழுவினால் பொடுகு தொல்லை நீங்குவதுடன் கூந்தல் பளபளப்பு பெறும்.
இரண்டு தே.கரண்டி வெந்தயத்தை அரை கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இந்த எண்ணெயை முடியின் வேர் முதல் நுனி வரை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வர கூந்தல் அடர்த்தியாகவும் உறுதியாகவும் வளர ஆரம்பிக்கும்.
இரண்டு தே.கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில், அதை அரைத்து பேஸ்ட் செய்து கூந்தலில் தடவி 30 நிமிடம் ஊற விட்டு கூந்தலை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கூந்தல் உதிர்வது குறையும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் கூந்தல் உதிர்வது முற்றாக நின்றுவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |