2 சொட்டு விடுங்க.. அடிவயிற்று பிரச்சனைகள் சரியாகும்
பொதுவாக வயிற்று வலி வந்து விட்டால் 2 சொட்டு எண்ணெய்யுடன் தண்ணீர் கொஞ்சம் கலந்து வயிற்றில் தடவ சொல்வார்கள். இது உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும் என்ற கதை உள்ளது.
அதிலும் குறிப்பாக, பெண்கள் பலருக்கும் பி.சி.ஓ.டி மாதவிடாய பிரச்சனைகள் பற்றி கேள்விபட்டிருப்போம்.
அந்த பிரச்சினையுள்ளவர்கள் 2 சொட்டு வேப்ப எண்ணெய் அடிவயிற்றில் தடவினால் சரியாகும் என மருத்துவர் ஒருவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பெண்கள் பலருக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டி என்கிற பி.சி.ஓ.டி பிரச்சனை இருக்கும். சீரற்ற மாதவிடாய் பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. சித்த மருத்துவத்தில் குணப்படுத்த வாய்ப்பு உள்ளதாக குறித்த மருத்துவர் பேசியிருக்கிறார்.
அந்த வகையில் அடிவயிற்றில் வேப்ப எண்ணெய் தடவுவதன் மூலம் என்ன பிரச்சனைகள் சரியாகும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
வேப்ப எண்ணெய்யால் கிடைக்கும் பலன்கள்
- வயிற்று வலி மற்றும் மாதவிடாய் வலிக்கு வேப்ப எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இதனை அடி வயிற்றில் தடவி வந்தால் மாதவிடாயின் போது ஏற்படும் வலி குறையும்.
- வேப்ப எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் வரும் பருக்கள் மற்றும் தழும்புகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளுக்கும் இது நிவாரணம் அளிக்கும்.
- தொப்புளில் 2 சொட்டு வேப்ப எண்ணெயைத் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும். இப்படி செய்து வந்தால் பி.சி.ஓ.டி பிரச்சனை, சீரற்ற மாதவிடாய் பிரச்சனை, எண்டோமெட்ரியோசிஸ் கண்டிஷன் ஆகிய நோய்கள் குணமாகும்.
- எந்தவொரு மருத்துவ பிரச்சனையாக இருந்தாலும், வேப்ப எண்ணெய் பயன்படுத்தும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையை எடுத்து கொள்ள வேண்டும்.
- வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் கலந்து அடிவயிற்றில் தடவினால் கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் குணமடைய வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
