நோய் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்கும் பூண்டு சட்னி - இந்த 4 பொருள் போதும்
வழமையாக செய்யும் பூண்டு சட்னியை விட நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நான்கு பொருட்கள் சேர்த்து சட்னி செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.
பூண்டு சட்னி
பூண்டு உங்கள் உணவின் சுவையை மேம்படுத்துவதற்கு மட்டுமல்ல அது உடலுக்குள் சென்று கடுமையாக உழைக்கும் ஒரு அருமருந்து என கூறலாம்.
இது அடிக்கடி வரும் சோய்களுக்கு சிறப்பான நிவாரணியாகவும் செயல்படுகிறது. பூண்டை தினமும் சாப்பிட்டால் நமக்கு வைத்தியர் தேவை இல்லை.
அந்த வகையில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பூண்டு சட்னியை என்ன சீக்ரெட் பொருட்கள் போட்டு செய்யலாம்.
செய்யும் முறை
முதலில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதனுடன் 10 காஷ்மீர் சிவப்பு மிளகாய்களைச் சேர்க்கவும்.
அதை 10-15 நிமிடங்கள் ஊற விடவும். இது மழுமையாக ஆறிய பிறகு சிவப்பு மிளகாயை தனியாக வடிகட்டவும். இந்த ஊறவைத்த தண்ணீரை தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாடியில் வடிகட்டிய சிவப்பு மிளகாய், 20 பூண்டு துண்டுகள் மற்றும் 1 தேக்கரண்டி புளி சேர்க்கவும். பின்னர் அதில் தனியே எடுத்து வைத்த ஊறவைத்த தண்ணீரை சேர்க்கவும்.
இதை நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும். ஒரு சிறிய கடாயில் ½ தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, மிளகாய்த்தூள் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த கலவையை சேர்க்கவும்.
பின்னர் அதில் மிக்ஸியை கழுவி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது, நிறைய சிதறக்கூடும் என்பதால், பாதியளவு மூடி வைத்து சமைக்கவும்.
இதை 10 நிமிடம் சமைக்க வேண்டும். பின்னர் தேவையான உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கவும். பின் ½ தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
இதை மேலும் 2 நிமிடங்கள் சமைக்கவும். இதில் எள் எண்ணெயை சூடாக்கி, 1 டீஸ்பூன் கடுகு மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சட்னியின் மேல் சேர்க்கவும். அடுப்பை விட்டு இறக்கினால் பூண்டு சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
