பொடுகு தொல்லையால தலை அரிக்குதா? அப்போ வேப்பம் இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க
பொதுவாக தலை மிகவும் வரண்டு காணப்படும் போது பொடுகு பிரச்சினை அதிகமாக இருக்கும்.
இதனால் வெளியில் செல்ல முடியாது, நினைத்த மாதிரி முடியை வார முடியாது, என பல பிரச்சினைகள் ஏற்படும்.
அத்துடன் அதிகமாக வியர்வை இருக்கும் பொழுது, தலை அரிக்க ஆரம்பிக்கும். இந்த பிரச்சினை காலப்போக்கில் சொரியாசிஸ் போன்ற கொடுமையான நோய்களை ஏற்படுத்தும்.
உதாரணமாக, உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் பொடுகு தொல்லை ஏற்படுகின்றன.
அந்த வகையில் பொடுகு பிரச்சினையை இல்லாமலாக்கும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வேப்பிலை ஹேர்பேக்
தேவையான பொருட்கள்
- வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 3 துளிகள்
செய்முறை
பொடுகு தொல்லை பிரச்சினையுள்ளவர்கள் வேப்பிலையில் பேக் செய்து தலைக்கு போடலாம்.
ஒரு கைப்பிடி அளவிற்கு வேப்பிலை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் இரண்டு அல்லது மூன்று துளிகள் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் சேர்த்து கலந்து விடவும். எனினும், எலுமிச்சை சாறு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இந்த ஹேர்பேக்கை தலைக்கு குளிப்பதற்கு முன்னால் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.
சுமாராக 30 நிமிடங்கள் கழித்து நன்றாக குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
இப்படி வீட்டில் செய்யும் ஹேர்பேக்குகளில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
