பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு! அருமையான டிப்ஸ் இதோ
பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தலையில் பொடுகு பிரச்சினை இருக்கும்.
இந்த பிரச்சினை, முறையான பராமரிப்பின்மையாலும் மற்றும் ஓமோன்கள் பிரச்சினைகளாலும் ஏற்படுகிறது.
இதனை முறையானதொரு சிகிச்சை முறையின் மூலம் மட்டுமே குணப்படுத்தலாம், இவ்வாறு சிகிச்சையளிக்க தவறும் பட்சத்தில் தலைமுடியை இழக்க நேரிடும்.
அந்த வகையில் பொடுகு பிரச்சினைகளை எவ்வாறு கட்டுபடுத்தலாம் என்பதனை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பொடுகு பிரச்சினை கட்டுபடுத்த வேண்டுமா?
பொடுகு பிரச்சினைகள் உள்ளவர்கள் தினமும் தலைக்குளிப்பது நல்லது, இவ்வாறு செய்து வருவோமானால் தலையில் அழுக்கு சேர்வது குறைவாக இருக்கும், இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.
தினமும் கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி கொட்டுவதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் வளர உதவுகிறது. இதனால் பொடுகு பிரச்சினை குறைவடையும்.
பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிரை ஒரு அரைமணி நேரம் தலையில் ஊற வைத்து குளிப்பதால் கேசத்துக்கு ஊட்டசத்து கிடைப்பதோடு முடி கொட்டுவதும் குறைகிறது.
தினமும் வெதுவெதுப்பான எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கப்படுவதோடு தலையில் இரத்த ஓட்டம் அதிகமாகி முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்குகிறது.
இவ்வாறான இயற்கை பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்துவதினால் பொடுகு மற்றும் முடி உதிர்வு பிரச்சினைகள் குறைவடையும்.
