உடற்பயிற்சி செய்ய புரோட்டீன் உணவு அவசியமா? சரத்குமாரிடம் நிரூப் கோரிக்கை
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் நிரூப் தான் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு புரோட்டீன் நிறைந்த உணவுகள் கிடைக்கவில்லை என்றும் அதனால் தான் உடற்பயிற்சி செய்யவில்லை என்றும் சரத்குமாரிடம் கூறினார்.
இதற்கு சரத்குமார் கண்டிப்பாக புரோட்டீன் உணவு தேவையா? என்றும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இவ்வாறு உடற்பயிற்சி செய்கையில், புரோட்டீன் உணவு எடுத்துக்கொள்கின்றனரா என்ற கேள்வியும் எழுப்பினார்.
அதன் பின்பு பிக்பாஸிடம் தன்னால் முடிந்தால் நீங்கள் கேட்கும் உணவினை கொடுக்கக் கூறுகிறேன் என்று கூறினார்.
வொர்க் அவுட் செய்வதற்கும் புரோட்டீன் உணவுகளுக்கும் என்ன தொடர்பு? எக்சர்சைஸ் செய்பவர்கள் கட்டாயம் புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டுமா? ஏன்? என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
``புரோட்டீன் எனப்படும் புரதச்சத்து நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். உடற்பயிற்சிகள் செய்யும்போது நம் தசைகளைப் பழுதுபார்ப்பதிலும் கட்டமைப்பதிலும் புரதச்சத்துகளே பெரும்பங்கு வகிக்கும்.
நம் உடலின் சீரான இயக்கத்துக்கு கார்போஹைட்ரேட்ஸ், புரதம் மற்றும் கொழுப்பு என மூன்று சத்துகளுமே அவசியம்.
நீங்கள் மிகவும் ஆக்டிவ்வான நபர், தினமும் போதுமான அளவு உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளவர் என்றால் உங்கள் உடலின் தசைகளையும் திசுக்களையும் புதுப்பிக்க உங்களுக்கு புரதச்சத்து மிகமிக அவசியம்.
உடற்பயிற்சிகள் செய்யும்போது நம் உடல் தசைகள் தகரும் நிலைக்குச் செல்லும். அந்தத் தசைகளின் தளர்வைச் சரிசெய்து, கட்டமைக்க புரதச்சத்துள்ள உணவுகள் முக்கியம். ஒருவருக்கு அவரது உடல் எடையைப் பொறுத்து ஒரு கிலோவுக்கு 5 கிராம் புரதச்சத்து என்ற அளவில் அது தேவைப்படும்.
தினமும் உடற்பயிற்சிகள் செய்யும் நபருக்கு இதைவிட கூடுதலாகவே புரதம் தேவைப்படும். அப்போதுதான் அவரின் தசைகள் வலுப்பெறும். அதிக அளவில் புரோட்டீன் எடுத்துக்கொள்ளும்போது பசி உணர்வு கட்டுப்படும்.
அதன் மூலம் கொழுப்பு குறையும். அதனால்தான் விளையாட்டு வீரர்கள், தங்களின் எடையில் ஒவ்வொரு கிலோவுக்கும் 2.5 கிராம் அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வார்கள்.
இவை எல்லாவற்றையும்விட நம் நோய் எதிர்ப்பாற்றல் இயக்கத்தைப் பலமாக வைத்துக்கொள்ளவும் புரதச்சத்து மிக அவசியம். தேவை ஏற்படும்போது அது ஆற்றலுக்கும் உதவும். கோவிட் காலத்தில் மருத்துவர்கள் புரதச்சத்தின் அவசியத்தை வலியுறுத்துவதன் காரணமும் இதுதான்."