12 வயது வித்தியாசம்... ஆனால் திருமணம் செய்தது ஏன்? நஸ்ரியா சொன்ன அந்த வார்த்தை
12 வருட வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் நஸ்ரியா- பகத் பாசில் தம்பதியினர்.
நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகனவர் நடிகை நஸ்ரியா, தொடர்ந்து பல படங்களிலும் நடித்தாலும் திடீரென 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் வயது வித்தியாசம் 12 ஆண்டுகள், இவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் ஏன் என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
பகத்தை தேர்ந்தெடுத்தது ஏன் எனவும் கேள்விகள் எழுந்தது, இதற்கெல்லாம் ஒரே பதில் காதல் என்பது தான்.
காதல் மலர்ந்தது இப்படித்தான்
பெங்களூர் டேஸ் படத்தில் நடித்த போதே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது, ஒருகட்டத்தில் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போக மனதிற்குள் காதலித்து வந்துள்ளனர்.
நஸ்ரியாவே வெளிப்படையாக பகத் பாசிலிடம் காதலை வெளிப்படுத்த அவரும் ஓகே சொல்லிவிட்டார்.
காரணம், நான் உங்களை ஒரு குழந்தை போல் கடைசி வரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என கூறினாராம் நஸ்ரியா.
இதைக்கேட்டதும் அப்படியே உருகிப்போன பகத், உடனே ஓகே சொல்லிவிட்டார், இன்றுவரை நஸ்ரியா அவரது காதலை சொன்ன விதம் பற்றி பகத் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |